991a. ஆவேறு நிறமானாலும் பால்வேறு நிறமாமோ?
991b. Cows may differ in colors but milk does not.
992a. ஆழாக்கு அரிசி மூவாழாக்குப்பானை முதலியார் வருகிற வீறாப்பைப் பாரும்.
992b. Pride in his poverty.
993a. ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.
993b. He is an incorrigible fool.
994a. ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டி அடியேன் தலை மிடாப்போல.
994b. People pool together to punish.
995a. ஆளை ஆள் அறிய வேண்டும் மீனைப் புளியங்காய் அறிய வேண்டும்.
995b. Know the other men.
996a. ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்.
996b. Willing hands make the work easier.
997a. ஆறினால் அச்சிலே வார் ஆறாவிட்டால் மிடாவிலே வார்.
997b. Food is not to be wasted.
998a. ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அவிழ்ப்பானேன்?
998b. There is a time and place for everything.
999a. ஆறு கொண்டது பாதி தூறு கொண்டது மீதி.
999b. Nature can ruin man.
1000a. ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு?
1000b. Practice makes perfect.