911a. அண்டையிற் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்.
911b. A king without wise counselors will be destroyed.
912a. அண்ணனிடத்தில் ஆறுமாதம் வாழ்ந்தாலும், அண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா?
912b. Discretion is wisdom.
913a. அண்ணனும் தம்பியும் சென்மப் பகைவர்.
913b. Sibling rivalry
914a. அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்.
914b. One man’s loss is another man’s gain.
915a. அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா?
915b. When God is with you no one can hurt you.
916a. அதிக ஆசை அஷ்ட தரித்திரம்.
916b. Covet all and lose all.
917a. அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால், விடியுமட்டும் திருடலாம்.
917b. Nothing can stop an organized crime.
918a. அதிகாரி வீட்டில் திருடி தலையாரி வீட்டில் வைத்ததுபோல.
918b. Hiding the loot in the inspector’s house.
919a. அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியையே உடைக்கும்.
919b. Authority adds power.
920a. அதிர்ஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் வந்தாலும் அதையும் பூனை குடிக்கும்.
920b. Getting is one thing and enjoying it is quite another.